ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பிரபல பார்முலாஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா 1975-ஆம் ஆண்டு பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.சாதனைகள் பல துளிர் விடும் சூழ்நிலையில் 1976-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். காயத்திலிருந்து மெதுவாக மீண்டு 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பார்முலா ஒன் தொடர்களில் கோப்பையைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார்.1997 முதல் 2005 வரை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப் பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்று நோயும் சேர்ந்ததால் வீட்டிற் குள்ளேயே முடங்கினார். தொடர் சிகிச்சை மேற்கொண்ட நிக்கிலாடா தனது 70வது வயதில் காலமானார்.