கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில் பாதுகாப்பு படை சார்பில் திருக் கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை கிராமத்தில் மரம் நடும் விழா நடை பெற்றது. மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) சீனியர் கமாண்டன்ட் சிசிர்குமார் குப்தா தலைமையில் உதவி கமாண்டன்ட்டுகள் வெங்கடராஜி, பி.எஸ்.மேத்தா, ஆய்வாளர் ஆர்.கே.சர்மா, திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் கார்த்திக் ரகுநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.