tamilnadu

மும்மொழித் திட்டம் என்பது இந்தி திணிப்பே ஆர்.நல்லகண்ணு பேட்டி

திருவில்லிபுத்தூர், ஜூன் 6-மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழித் திட்டம் என்பது,   இந்தியை திணிக்கும் முயற்சியே என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  அப்போது அவர் மேலும் கூறியதாவது:இந்தியை திணிப்பை எதிர்த்து பல ஆண்டுகள் தமிழகத்தில்  போராட்டம்நடைபெற்று வருகிறது. மத்திய அரசு,வடமொழிக்கு கொடுக்கும் முக்கியத் துவம் தமிழுக்கு கொடுப்பதில்லை.  கர்நாடகா மாநிலத்தில்,  மேகதாது அணை கட்டுவதற்கு  மத்திய அரசு உறுதுணை யாக இருப்பது கண்டிக்கதக்கது. மேகதாது  திட்டத்தை உடனே கைவிட வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும். எனவே,    இத்திட்டங்களை உடனே கைவிட வேண்டும். தமிழகத்தில்  எப்போதும் இல்லாத வகையில் கடும் வறட்சி நிலவுகிறது. இயற்கை வளத்தை அதிமுக ஆட்சி அழித்து வருகிறது. குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக  தீர்க்க நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும். நீட் தேர்வை தமிழகம் எதிர்க்கிறது.  இதில் மத்திய அரசு தனிச்சையாக செயல்படுகிறது. நீட் தேர்வை கைவிட வேண்டும்.  மோடியினுடைய  கொள்கையை, பிஜேபியின் மதவெறியை நாங்கள் எதிர்க் கிறோம். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றத் தவறிவிட்டார்.  மோடி, 2வது முறை யாக பதவி ஏற்ற 3 நாட்களுக்குள் வடமாநிலங்களில் மதவெறியர்களால் அப்பாவி மக்கள் தாக்கப்படுகின்றனர்.தமிழகத்தில்,  எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரக்கூடாது எனகருதுகிறோம்.  எந்தவித நல்ல திட்டத்தை யும் அதிமுகவினர் நிறைவேற்றவில்லை. மத்திய அரசை எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் ஆகிவிட்டார்கள். மத்திய அரசின் தயவில் வாழ்கிறார்கள் என தெரிவித்தார்.

;