காஞ்சிபுரம், நவ. 7- காஞ்சிபுரம் மாவட்டம் சிட்டியம்பாக்கம் இந்திரா குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் இலுப்பைப்பட்டு கிராமத்தில் 10 வருடமாக மூடப்பட்டுள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாது காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையி லிருந்து காணவில்லை. இதனைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் பல இடங்களி லும் தேடி கிடைக்கவில்லை. பின்னர் இவர் தொழிற்சாலை க்கு சென்று பார்த்தபோது வெங்கடேசன் தூக்கிட்ட நிலையில் இறந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.