tamilnadu

img

அத்திவரதர் தரிசனம் : பொறுப்பின்மையால் குவியும் குப்பைகள்... துப்புரவுத் தொழிலாளர்கள் அவதி

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அத்திவரதரை காணவரும் பக்தர்கள் சிலர் குடிநீரை வீணடிப்பது, குப்பைகளை கண்ட இடங்களில் வீசிச் செல்வது எனபொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதால், அவற்றை அகற்றும் பணியில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசனம் காண வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துகுவிந்தவண்ணம் உள்ளனர்.நாள்தோறும் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் வந்து எளிதாக தரிசனம் பெற்றுச் செல்ல ஏதுவாக,மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.5 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுஅதிகாரிகள் இதற்காக பணி யமர்த்தப்பட்டுள்ளனர். 600க்கும்மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர். நூறு இடங்களில் கழி வறைகள், 70 இடங்களில் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.நாள்தோறும் அதிகரித்து வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஆயிரக்கணக்கான போலீசாரும் ஈடுபட்டு வரும் நிலையில், உள்ளூர் மக்களில் சிலர் நாள்தோறும் தரி சனத்துக்கு வந்து செல்கின்றனர் என கூறப்படுகிறது. இதனால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்து பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இதனையடுத்து 3 முறைக்கு மேல் தரிசனம் செய்த உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிநீருக்காக வைக்கப்பட்டுள்ள மினி டாங்குகளில் வரும் நீரை பாதங்களைக் கழுவ பயன்படுத்து வது, அளவுக்கு அதிகமாக திறந்துவிட்டு வீணடிப்பது உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் இதுபோன்ற செயல்கள் வருத்தத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இது ஒருபுறம் இருக்க கோவி லைச் சுற்றிலும் டன் கணக்கில் காலணிகள் குவிந்து கிடப்பதைக் காண முடிகிறது. துப்புரவு தொழி லாளர்கள் இரவும் பகலும் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டாலும் நாள்தோறும் குவி யும் காலணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே பக்தகர்கள் தங்கள் காலணிகளை தங்கும் விடுதிகளிலோ, வீடு களிலோ, வாகனங்களிலோ விட்டு விட்டு வருமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாமல் திரும்பும் இடமெங்கும் குப்பைகள் குவிந்து கிடப்பதையும் காண முடிகிறது. குப்பைகளை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களிலும் வீசிச் செல்லும் சில பக்தர்களின் செயல்களால் துப்புரவு தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே தங்களது சேவையை தொடர்ந்து தடையின்றி வழங்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;