tamilnadu

செய்தித் துளிகள்

150 காவலர்களுக்கு தொற்று

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 காவலர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 70 காவலர்கள் என 150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 124 காவலர்கள் குணமடைந்துள்ளனர். 26 காவலர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

2ம் கட்ட தடுப்பூசி பரிசோதனை

சென்னை அடுத்துள்ள காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான முதல்கட்ட சோதனை வெற்றிபெற்றதை தொடர்ந்து, வியாழனன்று (ஆக.6) கோவாக்சின் 2ம் கட்ட தடுப்பூசி தொடங்குகிறது.

சென்னை: கொரோனா தற்கொலை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குடல் புற்றுநோயுடன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.