காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கீழ்அம்பி கிராமம் அருகே வடக்கு ஏரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் திடகாத்திரமான ஆண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொலை செய்து 500 கிலோ எடையுள்ள கட்டைகள் வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.