tamilnadu

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89.90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 2.69 சதவீதம் அதிகம்

செங்கல்பட்டு, ஏப். 19-தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப் பட்டன. காஞ்சிபுரம் மாவட் டத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உடன் இருந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89.90 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு 87.21 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 2.69 சதவீதம் அதிகரித்து தரவரிசையில் கடந் தாண்டு 24ஆம் நிலையில் இருந்த காஞ்சிபுரம் மாவட் டம் 23ஆம் இடத்துக்கு முன்னேறியது. மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட் டத்தில் 151 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் 21,171 மாணவர்கள், 25,070 மாணவிகள் என மொத்தம் 46,241 மாணாக் கர்கள் தேர்வெழுதினர். இதில் 18,247 மாணவர்கள், 23,324 மாணவிகள் என மொத்தம் 41,571 மாணாக் கர்கள் தேர்ச்சி பெற்றனர். இது மாணவர்கள் சதவீத அளவில் 86.19ம் மாணவிகள் சதவீத அளவில் 93.04 ம் தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்வில் 116 அரசுப்பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்களில் 80.60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.56 சதவீதம் அதிகம் ஆகும்.

;