tamilnadu

பாலாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிமுக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிவித்த தடுப்பணை களுக்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. தற்போது கட்டப்பட்ட இரண்டு தடுப்பணை களும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதால் காஞ்சிபுரம் மாவட்டத் திற்கு அறிவிக்கப்பட்ட உத்திரமேரூர் வட்டம் வெங்குடி கிராமம் அருகே 14 கோடியில் பாலாற்றின் குறுக்கே தடுப்புச்சுவரும், உத்திரமேரூர் வட்டம் உள்ளாகூர் கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்புச் சுவரும், காஞ்சிபுரம் வட்டம் காலூர் கிராமம் அருகே 20 கோடியில் பாலாற்றின் குறுக்கு தடுப்புச் சுவரும் கட்ட அறிவிக்கப்பட்ட தடுப்பணை களைக் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு கடந்த மாதம் நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொண்ணையாவி டம் கோரிக்கை மனுவினை வழங்கி னார்.
செயற்பொறியாளர் பதில் 
இதற்குப் பதில் அளித்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட கீழ் வடிநில பாலாறு செயற்பொறியாளர் தியாக ராஜன் தமிழக முதல்வரால் அறி விக்கப்பட்ட பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்டும் திட்டத்தின் கீழ் தற்போது ஈசூர் வள்ளிபுரம் தடுப்பணை மற்றும் வாயலூர் தடுப் பணை பணிகள் முடிவுற்றுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே வெங்கடா புரம், வெங்குடி, மற்றும் உள்ளாகூர் ஆகிய பகுதிகளில் தடுப்பணை அமைக்க அரசின் ஒப்புதலுக்காக மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள் ளது. அரசின் நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்குக
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உருவாக்கப் பட்டு அதற்கான துவக்க விழா செங்கல்பட்டில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம் இரும்புலிச்சேரியில் புதியதாக ஒரு தடுப்பணை கட்டப்படும் என அறி வித்தார் அதற்கான நிதியும் ஒதுக்கப்படாமல் உள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேருவிடம் கேட்ட போது ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட ஈசூர் வள்ளி புரம் தடுப்பணை, வாயலூர் தடுப்பணை இரண்டும் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் சென்றுவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என எந்த ஒரு தடுப்ப ணையும் இல்லாத நிலை உள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட் பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட் டுள்ள தடுப்பணைகளைக் கட்ட அரசு உடனடியாக நிதி ஒதுக்கிடு வதுடன் நிர்வாக அனுமதியை வழங்கிட வேண்டும். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் துவக்க விழாவில் முதல்வர் அறிவித்த தடுப்பணைக்கும் உடனடியாக நிதி ஒதுக்கிட வேண்டும்.  தற்போது கட்டப்பட்டுள்ள இரண்டு தடுப்பணைகளும் நிரம்பி யுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது. விவசாயத்திற்கும், குடிதண்ணீ ருக்கும் பயன்படும் அதே வேலை யில் இரண்டு தடுப்பணையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் அதற்கான நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும் என்றார்.

;