tamilnadu

img

கேரள அரசைப் போல் தமிழக பள்ளிகளுக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும்

மதுரை, மே 31-கேரள அரசைப் போல் பள்ளிகளுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை மேம்படுத்தஅரசு முயற்சி செய்ய வேண்டுமெனஇந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.செல்வா கூறினார்.அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டுமென்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும்சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண் டுள்ளனர்.கன்னியாகுமரியில் இருந்து மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையிலான பயணக்குழு புதனன்று மதுரை வருகை தந்தது.இதைத் தொடர்ந்து மதுரை செல்லூர் 50 - அடி ரோட்டில் இந்தியமாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.வேல்தேவா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, புறநகர் மாவட்டத் தலைவர் கா.பிருந்தா முன்னிலை வகித்தார், பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன், முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.செல்வா, திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்

இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில், இந்திய அரசு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யும் தொகையில் ஒரு பங்கைக்கூட கல்விக்கு ஒதுக்குவதில்லை, ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் சாலைகளை உடனடியாக சீரமைப்பதற்கு நிதி உள்ளது. ஆனால்,அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தவேண்டும், மேம்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நிதியில்லை என்றுமத்திய - மாநில அரசுகள் கூறுகின்றன. இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சிக்கும் செயல். இன்றைக்கு கல்வி பெரும் சூதாட்டமாக மாறியுள்ளது, ஆரம்பக் கல்வி கற்க வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மக்கள் அனைவரும் அரசியல் கற்க வேண்டும் அரசியல் கற்றால் தான் நம்முடைய பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும், கல்வி வணிகமயம் ஆவதைத் தடுக்க முடியும். அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் போராடி வருகிறது. அவர் களுடன் சேர்ந்து மக்களும் போராட வேண்டுமென்றார்.முன்னாள் மாநிலச் செயலாளர் செல்வா பேசுகையில். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் அதற்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நிதி கொடுங்கள் என்று கூறியுள்ளார் இது இந்திய மாணவர் சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

1968 - ஆம் ஆண்டு சமச்சீர் கல்விஉருவாக்கப்பட்டது. ஆண் - பெண்சாதி பாகுபாடுகளின்றி ஒரே பள்ளியில் படிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதை நாட்டில் பலர் தடுக்கின்றனர் என்று கோத்தாரி குழு கூறியது. இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடி இந்தியாவில் சமச்சீர் கல்வியை கொண்டுவந்துள்ளது. நான்கு பாடத் திட் டங்களாக இருந்ததை ஒரே பாடத்திட்டமாக நிறைவேற்ற வைத்தது மாணவர் சங்கம். இன்றைக்கு அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்று போராடி வருகிறோம். மாணவர் சங்கம் நடத்தும்சைக்கிள் பிரச்சாரத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவில் 3 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள்தனியார் பள்ளிகளிலிருந்து இருந்துஅரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளார் கள். மாவட்டத்திற்கு ஒரு சிபிஎஸ்சிபள்ளி என்பதை கேரளா இடது ஜனநாயக முன்னணி அரசு கொண்டுவந்துள்ளது, 8- ஆம் வகுப்பு முதல்12 - ஆம் வகுப்பு வரை ஸ்மார்ட் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் சாதி, மத உணர்வு அதிகரித்துவருகிறது, பெண்கள் சமமாக மதிக்கப்படுவத்தில்லை. 90 சதவீத தனியார் பள்ளிகளில் சரியான ஆசிரியர்கள் இல்லை. அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. வேலை வாய்ப்பு அலுவலங்களில் ஆசிரியர்பணிக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள் ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர் களைச் சேர்க்க வேண்டும் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த தனியார் நிறுவனங்கள் நிதி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார். தனியார்நிறுவனங்கள் உதவி செய்தால்அவர்கள் பள்ளியை அபகரிக்கத் தான் நினைப்பார்கள். கேரள அரசைப் போல் பள்ளிகளுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை மேம்படுத்த அரசு முயற்சி செய்ய வேண்டுமென்றார்.