காஞ்சிபுரம், அக். 28- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிள்ளனர். அவசர சிகிச்சைக்கு மருத்துவம் அளிப்பதில் எந்தவித தடையுமில்லை என மருத்துவர்கள் கூறி யுள்ளனர். தமிழகம் முழுவதும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் நியமனம், 10 ஆண்டுகளை முழுமையாக அமல் படுத்தா மல் இருக்கும் பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்தவும் , குழு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு மருத்துவர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரை யற்ற தொடர் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடு பட்டுள்ளனர். அவசர சிகிச்சை , பச்சிளம் குழந்தைகள் பிரிவு , மகப்பேறு , 24 மணி நேர காய்ச்சல் பிரிவு என குறிப்பிட்ட பிரிவு களில் மருத்துவர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருவார்கள் எனவும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தங்கள் போராட்டம் இருக்கும் என மாவட்ட மருத்துவர்கள் சங்க காஞ்சிபுரம் கிளை தெரிவித்துள்ளது.