காஞ்சிபுரம், ஜூன் 13 - சுங்குவார்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கீதா வெளியூர் சென்று சனிக்கிழமையன்று (ஜூன் 13) வீடு திரும்பியுள் ளார். வீட்டின் முன் கதவை திறந்து உள்ளே சென்ற போது, வீட்டின் பின்பக்க கத வின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யுற்றார். இதனைத்தொடர்ந்து, கீதா அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருபெரும் புதூர் உதவி காவல் கண் காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.