tamilnadu

img

பால்வாடி பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சிக்  குட்பட்ட கோட்டையாம்பாளையம் கிராமத்தில் உள்ள பால்வாடி பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகம் இருப்பதால் கொசுக்கடியால் இரவு தூங்க முடியாமல் அவதிபடுவதாகவும், இதனால் டெங்கு காய்ச்சல் வரவாய்ப்பு உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றிய நிர்வாகம் தலையிடுமா?