tamilnadu

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல்துறை ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

கள்ளக்குறிச்சி, ஜன.7- கச்சிராயப்பாளையம் அருகே பால்ராம்பட்டு கிரா மத்தை சேர்ந்தவர் கங்காதரன் (54). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு (67) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக கங்காதரன் கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்நிலையில் பிரச்ச னைக்குரிய இடத்தில் கச்சிராயப்பாளையம் காவல்துறை பாதுகாப்புடன் அய்யாக்கண்ணு வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதையடுத்து பிரச்சனைக் குரிய இடத்தில் வீடு கட்டுவ தற்கு தடை ஆணை வழங்கக் கோரியும், அய்யாக்கண்ணு உள்பட 12 பேர் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரியும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது கள்ளக்குறிச்சி மாவட்ட  உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைக் காக ஆஜராகுமாறு கச்சி ராயப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் வள்ளிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இருப்பி னும் ஆய்வாளர் வள்ளி நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. இதையடுத்து வழக்கில் ஆஜராகாத ஆய்வாளர் வள்ளிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிபதி ரெஹானாபேகம் பிடி வாரண்டு பிறப்பித்து உத்தர விட்டுள்ளார்.

;