tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செதிகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 20 ஆயிரம் கனஅடி யில் இருந்து 25 ஆயிரம் கனஅடி யாக உயர்ந்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அவர் கோமா  நிலையில் உள்ளார் என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்துடன் ‘டிக் டாக்’ செய்து கொள்ளும் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு நீடித்த பலன் அளிக்கும் வகையிலும் முழு பாதுகாப்பு அளிக்கும் வகை யிலும் இருக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான மொசாம் பிக்கில் பல நாள் சண்டைக்குப் பின்னர் அந்நாட்டின் துறைமுகத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றி யுள்ளனர்.

பெங்களூருவில் வன்முறை ஏற்பட்ட டி.ஜே.ஹள்ளி-கே.ஜி.ஹள்ளி பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், 25 ஆண்டுக்கு  பிறகு பி.எஸ்.ஜி. அணி அரை இறுதிக்கு தகுதிபெற்றது.

ஐ.பி.எல். போட்டிக்கு தயாராக சேப்பாக்கத்தில் நடைபெற இருக் கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யின் முகாம் பயிற்சியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி யமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 3 பேருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட் டை உறுதிப்படுத்த ஆதாரம் இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியுள்ளது.

சீன செயலியான டிக் டாக் வணி கத்தில் முதலீடு செய்வது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்தி கள் வெளிவந்துள்ளன.

தென் அமெரிக்க நாடான பிரேசி லில் நடந்த நிதி முறைகேட்டில் தொடர்புடையதாக கருதப்படும் 67 இந்தியர்களின் வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளதாக, அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

உணவுப்பொருட்களின் விலை  உயர்வால், கடந்த ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஜூலை  மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் 6.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.

;