tamilnadu

img

பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் முதல்வரின் கிராமத்திலேயே விவசாயிகள் பயனடையவில்லை

சண்டிகர், மார்ச் 30-விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு என்ற பெயரில் மோடி அறிவித்த திட்டம்தான் ‘பிரதான் மந்திரிபசல் பீமா யோஜனா’ ஆகும். இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை; தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குத்தான் கொள்ளை லாபம் என்று, விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக ஆளும்ஹரியானா மாநிலத்தில், அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மனோகர் லால் கட்டாரின் சொந்த கிராமத்திலேயே ‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’ திட்டத்தால் யாரும் பயனடைய முடியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.மனோகர் லால் கட்டாரின் பனியானி கிராமத்தில், விவசாயிகள் கடுமையான பயிர்ச் சேதத்தைச் சந்தித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகை செலுத்தாததால் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து பயிர்க் காப்பீட்டிற்கான பிரீமியம் என்ற பெயரில் பணம் எடுக்கப் பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தங்களுக்கான காப்பீட்டுத் தொகை கிடைக்க நடையாய் நடந்து அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், காப்பீட்டுத் தொகை கிடைக்குமா? என்பதற்குத்தான் எந்த உத்தரவாதமும் இல்லை.

;