கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டத்தை சேர்ந்த முகமது உசேன் சித்திக் என்பவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதாக சந்தேகத்தின் பெயரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
சவுதி அரேபியாவில் இந்தியா திரும்பிய முகமது உசேன் சித்திக் (76) என்பவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகமது உசேன் சித்திக் உயிரிழந்தார். இதை கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும் அவருடைய இறுதிச் சடங்குகளை கல்புர்கி மாவட்ட நிர்வாகமே முன்னெடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக சுகாராத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.