tamilnadu

img

அரசு இணைய தளத்தை முடக்க முயற்சித்த 25 வயது நபர் கர்நாடகாவில் கைது

கர்நாடகாவில் அரசு இணைய தளங்களில் ஊடுருவி முடக்க முயற்சித்த 25 வயது நபரை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணா (வயது 25) ஸ்ரீக்கி கணினி ஊடுருவல் (ஹேக்) செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இவர் கணினி அறிவியலில் இளங்கலை படித்துள்ளார். இவர் பல வலைதளங்கள், இணைய விளையாட்டுகளை ஹேக் செய்து சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து வந்துள்ளார். அரசு இணைய தலங்களையும் ஹேக் செய்ய முயற்சித்துள்ளார். பிட்காயின்களை வெல்ல இணைய போக்கர் விளையாட்டுகளை ஹேக் செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக அரசின் மின் கொள்முதல் வலைத்தளத்தை ஹேக் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இவர், கடந்த 2014 முதல் 2017 வரை நெதர்லாந்தில் வசித்து வந்தார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.