tamilnadu

புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடும் விதமாக கரூரில் புத்தக கண்காட்சி நாளை துவங்குகிறது

கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் ஆங்கில புத்தாண்டையொட்டி கரூர் அருகே உள்ள காந்தி கிராமம் விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடும் விதமாக நாளை புதன்கிழமையன்று காலை 10 மணிக்கு புத்தக கண்காட்சி துவங்கவுள்ளது.  இது குறித்து மேலும் மாவட்ட செயலாளர் ஜான்பாட்ஷா கூறியதாவது, குழந்தைகளுக்கான கதை, ஓவியம் புத்தகங்கள், அறிவியல், வரலாறு, கவிதை, பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெறுகிறது. அனைவரும் புத்தாண்டுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கவும், அனைவர் மத்தியிலும் வாசிப்பு பழகத்தை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக இந்த புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. இப்புத்தக கண்காட்சிக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் காமராஜ் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் ஜான்பாட்ஷா வரவேற்று பேசுகிறார். கிரெஸண்ட் பள்ளி முதல்வர் முனைவர் என்.சாகுல்அமீது சிறப்புரையாற்றுகிறார். கரூர் விக்டரி பேர்ட்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகி சூரிய கதிரவன் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். விஜயலட்சுமி பள்ளி முதல்வர் கார்த்திகா லட்சுமி பெற்றுக் கொள்கிறார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

;