tamilnadu

img

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான குற்றவியல் குறிப்பாணையை அரசு ரத்து செய்ய வேண்டும்... அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு கோரிக்கை

கரூர்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மண்டல அளவிலான போராட்ட ஆயத்தமாநாடு கரூரில் நடைபெற்றது. மாநாட் டிற்கு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் மு.சுப்பிரமணியன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜே.எஸ்.விஜயகுமார், மதுரை மாவட்ட தலைவர் ஜே.மூர்த்தி, தேனி மாவட்ட தலைவர் கு.வரதராஜ், திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.விவேகானந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாநிலத் துணைத் தலைவர் இரா.மங்களபாண்டியன், துணைத் தலைவர் ஆ.பெரியசாமி ஆகியோர் சிறப்புரையாற் றினர். சிஐடியு சங்க கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் கே.சக்திவேல், வருவாய்த்துறை அலுவலர்சங்கத்தின் மாநில செயலாளர் எம்.எஸ்.அன்பழகன் ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம் நன்றி கூறினார். மாநாட்டில் கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் களை சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் இரா.மங்களபாண்டியன் கூறியதாவது:

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5,068 பேருக்கு வழங்கப்பட்ட 17பி குற்றவியல் குறிப்பாணைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் அரசு துறையில் உள்ள4.5 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிறப்பு ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், வருவாய் கிராமஉதவியாளர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான ஆயத்த மாநாட்டில்லட்சம் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளஉள்ளனர். இதில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்குள் தமிழக அரசு, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிகோரிக்கைகளை தீர்வு காண நடவடிக்கை எடுத்திட வேண்டும். கோரிக் கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் மதுரையில் நடைபெறும் மாநில அளவில் நடைபெறும் போராட்ட ஆயத்த மாநாடுஅரசியல் திருப்புமுனை மாநாடாக அமையும் என அரசுக்கு இதன் மூலம் சங்கத்தின் மாநிலக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அரசு ஊழியர் களுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கப் படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்து இருந்தார். ஆனால் இதுவரை ஒரு அரசு ஊழியருக்கு கூட இந்த தொகை வழங்கப்படவில்லை. மேலும் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் எனஅறிவித்து அரசாணையை தமிழக முதலமைச்சர் வெளியிட்டு இருந்தார். முதல்வர் அறிவித்த அரசாணைப்படி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும் மாநாட்டு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள்மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட் டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

;