நுண் நிறுவனங்கள் அடாவடி வசூல் மாதர் சங்கம் மனு
நாகப்பட்டினம், ஜூலை 16- கொரோனா ஊரடங்கு காலத்தில், வேலை, வருமானம் இழந்து வாடும் ஏழை எளிய பெண்களிடமும், சுயநிதிப் பெண்கள் குழுவினரிடமும் நுண்நிதிக் கடன் நிறுவனம், கொடுத்த தொகையை வசூல் செய்திட, மிகுந்த நெருக்கடி அளிப்பதைத் தவிர்த்திட உதவுமாறு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், நாகை மாவட்டக் குழு சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்ப ட்டது. மாதர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் த.லதா மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். திருவெறும்பூர் திருவெறும்பூர் ஒன்றியம் பூலாங்குடி காலனி பகுதியில் நுண் நிதி நிறுவனங்களின் அடாவடி வசூலை கண்டித்து டிஎஸ்பி-யிடம் மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
உலர் உணவு வழங்கல்
தரங்கம்பாடி, ஜூலை 16- மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. செம்ப னார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சமூக நலம் மற்றும் சத்து ணவு திட்டத்துறை சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் பவுன்ராஜ் சத்துணவு உண்ணும் 117 மாண வர்களுக்கு உலர் உணவுகளை வழங்கினார்.
சிஐடியு கபசுர குடிநீர் வழங்கல்
பெரம்பலூர், ஜுலை 16- மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு) சார்பில் பெரம்ப லூர் மின்வாரிய அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிகம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மின்ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் (பொது) கி.சேகர் துவக்கி வைத்தார்.
குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
கரூர், ஜூலை 16- கரூர் மாவட்டம் ஜெகதாபியை அடுத்த பொரணி கிராம த்தைச் சேர்ந்த சீனிவாசன் மகள் காவ்யா(9), கருப்பசாமி மகள் கலையரசி(13) ஆகியோர் அதேபகுதியைச் சேர்ந்த தனது தோழிகள் தர்சினி, கஸ்தூரி(14) ஆகியோருடன் செவ்வாய்க்கி ழமை பிற்பகல் அதே பகுதியில் உள்ள கல்குவாரி அருகே விளையாடச் சென்றுள்ளனர். குவாரியில் உள்ள குட்டையில் தற்போது பெய்த மழை யால் நீர் தேங்கியிருந்ததால் நான்கு பேரும், கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காவ்யாவும், கலையரசியும் கால்தவறி குட்டைக்குள் விழுந்த னர். இதனால் அதிர்ந்துபோன கஸ்தூரியும், தர்சினியும் அக்க ம்பக்கத்தினரை அழைத்துள்ளனர். ஆனால் அப்பகுதியினர் வருவதற்குள் இருவரும் மூழ்கியதால், இருவரையும் காப்பாற்ற காவ்யாவும், தர்சினியும் குட்டையில் குதித்தனர். அதற்குள் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குட்டைக்குள் குதித்து 4 பேரையும் தேடினர். இதில் கஸ்தூரி மற்றும் தர்ஷினியை உயிருடன் மீட்டனர். பின்னர் காவ்யாவையும், கலையரசியையும் சடல மாக மீட்டனர். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.