tamilnadu

img

கரூரில் முதல்வர் கொரோனா ஆய்வு...

கரூர்;'
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் இலவசமாக தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதனன்று நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள்மற்றும் கொரோனா நோய் தொற்று பரவல்  தடுப்புப்பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசியஅவர், தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி 8லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்த அவர், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். மேலும் வேளாண் சட்டங்களில் பாதகமான அம்சம் இல்லை என்று தனது வழக்கமான பல்லவியைப் பாடிய முதலமைச்சர், விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றார். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். முதல்வரின் வருகையையொட்டி கரூரில் கொரோனா விதிகள், போக்குவரத்து விதிகள், காவல்துறை விதிகள் என அனைத்து விதிகளையும் மீறி பல்லாயிரக்கணக்கில் அதிமுகவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.