tamilnadu

img

பொதுத்துறைகள் விற்பனையை கைவிடுக! குமரி, தென்காசி, தூத்துக்குடியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.8- இந்திய நாட்டின் இறையாண்மை க்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்வது, போராட்டங்களின் விளை வாக கிடைத்த எட்டு மணி நேர வேலை உரிமையை 12 மணி நேரமாக உயர்த்து வது போன்ற நடவடிக்கைகளை கைவிடக் கோரி குமரி மாவட்டத்தில் 40 இடங்களில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கப்பட்ட ஆகஸ்ட் 9 நினைவு கூர்ந்தும் இந்தியா வை பாதுகாப்போம் என்ற முழக்கத் தோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தலைமை தபால் நிலை யம், பார்வதிபுரம், கருங்கல், இராஜாக் கமங்கலம், குலசேகரம், தக்கலை, நாகர்கோவில், பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம், அரசு போக்கு வரத்து கழக பணிமனைகள் உட்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகனன் தலைமை வகித்தார். எச்எம்எஸ் மாநி லத் தலைவர் எம்.சுப்பிரமணிய பிள்ளை, ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி இசக்கிமுத்து, எல்பிஎப் மாநிலச் செயலாளர் இளங்கோ, ஐஎன்டியூசி செயலாளர் வட்டவிளை முருகேசன், எம்எல்எப் செயலாளர் ந.மகாராசன், மீன் சங்க மாநில சம்மேளன பொ துச் செயலாளர் எஸ்.அந்தோணி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரன், நிர்வாகிகள் பொன்.சோபனராஜ், கே.பி.பெரு மாள், நடராஜன், சந்திரகலா, ஜெயா ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். 

தென்காசி
இதே போல் சிவகிரி காந்தி கலை யரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்து க்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நடராஜன், விவ சாயிகள் சங்கத் தலைவர் இராசேந்தி ரன் தலைமையிலும், சிஐடியு ஆட்டோ  சங்க மாவட்டத் துணைத்தலைவர் சக்திவேல், ஏஐடியூசி தலைவர் அரு ணாசலம் முன்னிலையிலும், சிவகிரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்து க்கு ஏஐடியூசி நகரத்தலைவர் பால சுப்பிரமன், விவசாயிகள் சங்க நகரத் தலைவர் நல்லதம்பி, தலைமையிலும், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சிங்காரவேலு தலைமையிலும், விவசாயத் தொழிலா ளர் சங்க தலைவர் பெரியசாமி முன்னி லையிலும் சிவகிரி பேருந்து நிலை யம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ராமசுப்பு, ஏஐடியூசி நகரத் தலைவர் அபிமன்யூ, விவசாயி கள் சங்க தலைவர் வே.சுப்பிரமணியன் முன்னிலையிலும், சிவகிரி 7ம் திருநாள் மண்டபம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத் துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தங்கவேல், விவ சாயிகள் சங்கத் தலைவர் குருசாமி தலைமையிலும், ஏஐடியூசி தலைவர் சுந்தரவேல், ஏஐடியூசி தலைவர் வேல்முருகன் முன்னிலையிலும் மற்றும் சக்திவேல், அழகர், கந்தன், கணேசன், இராமர், கார்த்திக், ப.வேலு சாமி, ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி 
தூத்துக்குடி மாவட்டத்தில் கோ வில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட 21 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பீச் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி மாநிலத தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் ரசல், ஆட்டோ சங்க மாவட்ட செயலா ளர் முருகன், எச்எம்எஸ் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் துறைமுகம் சத்யநாராயணன், ஏஐடியூசி சார்பில் பாலசிங்கம், ராஜ்குமார், தொழிலா ளர் முன்னேற்ற பேரவை சார்பில் முருகன், கருப்பசாமி, ஏஐசிசிடியூ சார்பில் மாவட்ட தலைவர் சகாயம், செயலாளர் சிவராமன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மட்டகடை 
மட்டகடை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் குமாரவேல், ஐஎன்டியுசி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுட லையாண்டி, ஏஐடியூசி ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பழைய மாநகராட்சி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் பொன்ராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பு மரியதாஸ் உள் ளிட்டோர் பங்கேற்றனர். தொழிலாளர் நல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் பெருமாள், காசி ஐஎன்டியூசி ராஜு, தொமுச ராஜு கலந்து கொண்டனர். துறைமுகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் பாலகிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், சந்திரசேகர், அண்ணா தொழிற்சங்கம் முருகேசன், ஏஐடியுசி ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;