சிதம்பரம்,மார் 8- மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு எழுதிய ‘யார் கைகளில் இந்து ஆலயங் கள்’ நூல் வெளியீட்டு விழா சிதம்பரத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதல் பிரதியை வெளியிட ரமேஷ்பாபு-வின் கல்லூரி கால ஆசிரியர் ராமநாதன் பெற்றுக் கொண்டார். பின்னர் விழாவில் பேசிய கே.பாலகிருஷ்ணன், “பல்வேறு பணிச்சுமை களுக்கிடை யிலும் சரியான நேரத்தில் ரமேஷ்பாபு இந்த நூலை எழுதியுள்ளார்” என்றார். அறநிலையத்துறையை கலைத்துவிட்டு ஆலய ங்களை எங்களிடம் ஒப்படை யுங்கள் என மத்திய அரசு ஒருபுறமும், பாஜகவினர் மறுபுறமும் நெருக்கடி கொடுத்து வரும் கால கட்டத்தில் இந்த நூல் எழுத ப்பட்டுள்ளது வரவேற் கத்தக்கது என்றும் அவர் கூறி னார். 70 ஆயிரம் கோயில் களை எங்களிடம் ஒப்படை யுங்கள் எனக் கூறும் மத்திய அரசு, கோயில்களை கைப்பற்றி அதில் இந்துத்து வாவையும், சமஸ்கிரு தத்தையும் புகுத்த வேண்டும் என முடிவு செய்து ஒரு பண்பாட்டு போராட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, ஜி.மாதவன். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயசீலன், விசிக மாநில துணைச் பொதுச் செயலா ளர் எஸ்.எஸ்.பாலாஜி, கட லூர் மாவட்டச் செயலாளர் பால அறவாழி, பாராளு மன்ற பொறுப்பாளர் வ.க. செல்லப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.