tamilnadu

img

விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை..

கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் 80 கி.மீ வேகத்தில் நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது.வங்கக் கடலில் நவ.22 ஆம் தேதி உருவாகி நிலைக்கொண்டிருந்த நிவர் புயல் புதன்கிழமைமாலை 4 மணிக்கு நிலப்பரப்பில் கடலூரை முதன்முதலாக தொட்ட கரையைக் கடக்கத் துவங்கியது. இதனால் செவ்வாய்க்கிழமை இரவு முதலே மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துக் கொண்டே இருந்தது. எனினும், புதன்கிழமை மதியத்திற்கு மேல் மழையின் வேகம் திகரிக்கத் துவங்கியது. 

புயல் கரையைக் கடக்கும் முன்பே பெய்யத் துவங்கிய கனமழை வியாழக்கிழமை காலை 9 மணி வரையில்பெய்துக் கொண்டே இருந்தது. காற்றின் வேகமும் இரவில் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால், சாலையோரங்களில் இருந்த மரங்கள், வீடுகளில் வளர்க்கப்பட்ட மரங்கள் விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. காற்றின் வேகத்தினால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே இரவினை கழிக்க வேண்டிய நிலை உருவாகியிருந்தது.இதற்கிடையில் நிவர் புயலின் மையப்பகுதி நள்ளிரவு 2 மணிக்கு கரையைக் கடந்ததாக  வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஏற்றப்பட்டிருந்த 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு காலை 5 மணிக்கு இறக்கப்பட்டது.

வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை விபரம் வருமாறு:

(மில்லி மீட்டரில்) கடலூர் 282.2, மாவட்ட ஆட்சியரகம் 278.5, வானமாதேவி 192, பரங்கிப்பேட்டை 183.9, கொத்தவாச்சேரி 141, புவனகிரி 136, குறிஞ்சிப்பாடி 135, 

அண்ணாமலை நகர்
133.6,  சிதம்பரம் 127.8,  சேத்தியாத்தோப்பு 112, பண்ருட்டி 106, , குப்பநத்தம் 96.6, லால்பேட்டை 88.5, விருத்தாசலம், 83, தொழுதூர் 72,  ஸ்ரீ்முஷ்ணம் 69.4, காட்டுமன்னார்கோயில் 63.4 மில்லிமீட்டர் மழை பதிவானது.புயல் முழுமையாக கரையைக் கடந்த நிலையில் காலை 9 மணிக்குப் பின்னர் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது.

;