tamilnadu

img

பொதுத்துறையாகவே மின் வாரியம் நீடிக்க வேண்டும் சிஐடியு கருத்தரங்கில் வலியுறுத்தல்

கடலூர், நவ.27- மின்சார வாரியம் பொதுத்  துறையாகவே நீடிக்க வேண்டுமென  மின் ஊழியர்  மத்திய அமைப்பு கருத்த ரங்கில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) விழுப்புரம் மண்டல கருத்த ரங்கம் மண்டலச் செயலாளர்  ஆர்.சிவராஜ் தலைமையில் கடலூரில்  நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே. காங்கேயன், மாநில துணைத்  தலைவர் கே.அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் டி. ஜெயசங்கர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலத் தலை வர் பி.சண்முகம்,  மின்ஊழி யர் அமைப்பு மாநில துணைச் செயலாளர் டி.பழனிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில துணைச் செயலாளர் கோ. மாதவன், விவசாயிகள் வாழ்  வாதார பாதுகாப்புச் சங்க  பொதுச்செயலாளர் பெ. ரவீந்திரன் ஆகியோர் கருத்து ரையாற்றினர். ‘இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சியை நிர்ண யிக்கும் மின்சாரத்துறையில் தனியார் முதலீடு தனி யாரை வளப்படுத்தவே உத வும். எனவே, நாட்டின் வளர்ச்  சிக்கு உதவும் மின்சாரத்  துறையை அரசின் பொதுத் துறை நிறுவனமாகவே நீடிக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மின்வாரிய சட்டத்தி ருத்த மசோதா-2018ஐ கைவிட வேண்டும். விவசா யம் மற்றும் சிறு,குறு தொழில்  களுக்கு இலவச மின்சார மும், மானிய விலையில் மின்  சாரமும் தொடர்ந்து கிடைக்க  உறுதி செய்ய வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் சி.பால சுப்பிரமணியன், எம்.பாலாஜி, ஆர்.சேகர், கே. விஜயகுமார் மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக  கடலூர் வட்டச் செயலாளர் என்.தேசிங்கு வரவேற்றார். பொருளாளர் என்.கோவிந்தராஜ் நன்றி கூறி னார்.

;