30 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஒன்றியங்களில் பிரச்சார இயக்கம் - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் நாகம்மாள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், வட்ட கிளை நிர்வாகிகள் ராஜேந்திரன், ஜான் பிரிட்டோ, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின முன்னாள் மாநிலச் செயலாளர் ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.