கடலூர், டிச.4- மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் குற்ற வாளியை வன்கொடுமை தடுப்புசட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வி.சுப்பு ராயன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பி.வாஞ்சிநாதன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.பி.தண்டபாணி, மாவட்ட நிர்வாகிகள் மணி, சரவணன், சுதேவன், ஜெய ராமன், மணிவண்ணன், வெங்கடேசன், அஞ் சலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.