மத்திய அரசு அறிவித்துள்ள எல்ஐசியின் பங்கு விற்பனையை எதிர்த்து கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், பண்ருட்டி, புதுச்சேரி சாரம் எல்ஐசி அலுவலங்களில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தின் போது பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை எல்ஐசி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.