tamilnadu

img

லால்பேட்டையில் இஸ்லாமியர்கள் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம்

சிதம்பரம், மார்ச் 17- கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில்  குடியு ரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தை இஸ்லாமியர்கள் நடத்தி வரு கின்றனர்.  போராட்டத்தின் 26 ஆவது நாளான செவ்வாய ன்று (மார்ச் 17)வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.  லால்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி காலையில் திறந்த உடனே அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய மக்கள் திரண்டு, ‘எங்களின் பணத்தை எடுத்துக் கொள்கிறோம்’ என வங்கி மேலாளரிடம் கூறினர். அப்போது, வங்கி மேலாளர் அவ்வளவு பணம் வங்கியில் இருப்பு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினார்.  இது பற்றி தகவல் அறிந்த  காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் ‘எங்களுடைய பணம் முழு மையாக கிடைக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற நட வடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் பல கட்டமாக தொடரும்’ என்று கூறினர். இனைத் தொடர்ந்து ரூ.49 ஆயிரத்து 900 என்ற அடிப்படையில் வழங்கப் பட்டது. இதை அனை வருக்கும் கொடுக்க முடியாத தால் வங்கியில் பணம் இருப்பு இல்லை என தெரி விக்கப்பட்டுள்ளது. தினமும் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கும் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்பினர் தெரித்தனர்.

;