tamilnadu

கடலூர் மாவட்டத்தில் 30,522 மாணவர்கள் மேல்நிலை தேர்வு எழுதுகின்றனர்

கடலூர், பிப்.26-  கடலூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வில் 30,522  மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.     மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி  வரை  நடைபெறவுள்ளது. தேர்வினை 235  பள்ளிகள் மூலம் 14,516  மாணவர்கள், 15826  மாணவிகள் என மொத்தம் 30,342  மாணவர்கள் எழுத உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.   தேர்வினை 439  பள்ளிகளில் 18,341  மாணவர்கள், 17,205  மாணவிகள் என  மொத்தம்  35,546  பேர் தேர்வு எழுதுகின்றனர்.   மேல்நிலைத் தேர்வு சார்பாக 108  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது  (கடலூர் கல்வி மாவட்டத்தில் 35,  விருத்தாசலம் கல்வி மாவட்டம் 27, சிதம்பரம் கல்வி மாவட்டம் 23, வடலூர் கல்வி மாவட்டம் 23.  மேலும் 3  தேர்வு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்விற்கு 138   தேர்வு மையங்கள் உள்ளன.  அதில்  4 மையங்களில் தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும்  காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு அலுவலர்கள் தலைமையிலான 8 பறக்கும் படையினரும்,   264 உறுப்பினர்கள் கொண்ட நிலைப் படையினரும் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அருகில் மைக் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்தவும், தேர்வர்கள் கைப்பேசியை தேர்வு மையத்திற்குள் கொண்டு வரவும் தடை செய்யப்பட்டுள்ளது.  தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்திற்கு எளிதாக செல்லும் பொருட்டு  போதுமான வகையில் அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தேர்வு நாட்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில்  நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பொதுத்தேர்வுகளுக்கு கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம் 7373002591, மற்றும் நான்கு கல்வி மாவட்டங்களில் கடலூ 9443335953, வடலூர் 9442820244, சிதம்பரம்  6380742757, விருத்தாசலம்  9994490135, ஆகிய ஐந்து இடங்களில் தேர்வு கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. அனைத்து மாணவர்களும் எந்தவித அச்சமுமின்றி பொதுத் தேர்வினை சிறப்பாக எழுதி கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

;