கடலூர், செப். 18- மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைக்க வலி யுறுத்தி, கடலூர் மாவட்ட மாட்டு வண்டித் தொழிலா ளர்கள் சங்கத்தினர் தங்க ளது குடும்பத்துடன் பண் ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சிறப்புத் தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியன் தலைமையில் உண்ணா நிலைப் போராட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.கருப்பையன் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி. திருமுருகன், மாவட்டச் செய லாளர்கள் பி.ராஜேந்திரன் (உள்ளாட்சி), ஆர்.உத்தரா பதி (சுமைப்பணி), விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.பழனிவேல் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். பண்ருட்டி வட்டத்தில் எலந்தம்பட்டு, காமாட் சிப்பேட்டை, அக்கடவல்லி, எஸ்.என்.பேட்டை ஆகிய இடங்களில் மாட்டு வண்டி களுக்கான மணல் குவாரி அமைத்து மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தலை வர்கள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தினர்.