tamilnadu

img

கடலூர் எம்.நாராயணன் காலமானார்

கடலூர், ஜூன் 19- மார்க்சிஸ்ட் கட்சியின் கட லூர் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம். நாராயணன் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 65.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பைத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த எம்.நாராயணன் தமிழ்நாடு விவசாய சங்கத்  தின் மாவட்டச் செயலாளராக வும், மாநில துணைத் தலைவ ராகவும், அகில இந்திய கவுன்சில் உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பல  ஆண்டு காலம் பணி புரிந்தார்.  உழைப்பாளி மக்களுக் காக கடுமையாக உழைத் துள்ளார். விவசாயிகளை திரட்டுவதிலும் விவசாயி கள் பிரச்சனையை முன்னெ டுத்து போராடுவதிலும் முன்னின்றவர் தோழர் நாரா யணன் சிறிது காலம் உடல் நலம் குன்றியிருந்த அவர் செவ்வாயன்று(ஜூன்18) காலமானார். சிபிஎம் மாவட்டச்  செயலாளர் டி. ஆறுமுகம், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செய லாளர் என்.சுப்பிரமணியன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ஏழு மலை, மாநிலக் குழு உறுப்பி னர்கள் ஜி.ஆனந்தன், ஜி. மாதவன், கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், வி.சுப்பு ராயன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஜி.ஆர்.ரவிச்சந்திரன், என்.எஸ். அசோகன். விவசாய சங்க மாநில பொருளாளர் கே .பி.பெரு மாள், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ்.வாலண்  டினா, துணைச் செயலாளர் கீதா, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தட்சிணா மூர்த்தி,  தலைவர் ஆர்.ஆள வந்தார், விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராதாகிருஷ்ணன், பூவராகவன், சீனிவாசன், அண்ணா கிராமம் கடலூர்  மாவட்டக் குழு உறுப்பி னர்கள் அமர்நாத், ஜெய பாண்டியன், லோகநாதன், உத்திராபதி, தனபால் உள்ளிட்ட ஏராளமானோர்  நாராயணன் உடலுக்கு  அஞ்சலி செலுத்தினர். அவ ரது இறுதிச் சடங்கு பைத்தாம்பாடி இடுகாட்டில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விவசாய  சங்க மாநில பொதுச் செய லாளர் பி.சண்முகம் ஆகி யோர் இரங்கல் செய்தி அனுப்பி இருந்தனர்.