tamilnadu

img

அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் போராட்டம்

சிதம்பரம், மே 18 - அண்ணா பல்கலைக் கழகத்தி லிருந்து பணி நிரவல் முறையில் தமி ழக அரசு பணிகளுக்கு 3 ஆயிரத்து 600 ஊழியர்கள் அனுப்பி வைக்கப்  பட்டனர். 3 ஆண்டுகால ஒப்பந்தம்  முடிந்த நிலையில் பல்கலைக் கழ கம் தங்களை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியு றுத்தி தொடர் இயக்கங்களை நடத்தி  வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பல்கலைக்கழக பதிவாளரிடம் ஊழி யர்கள் தனித்தனியாக மனு கொடுத்து  வருகின்றனர். இந்த நிலையில் திங்களன்று (மே 18) மாற்றுத்திறனாளி பெண் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் நூதன முறையில் குடையை பிடித்த படி வரிசையாக சென்று பல்கலைக்  கழக பதிவாளரிடம் மனு கொடுக்கும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு காவல் துறையினர் தடை விதித்தனர்.இத னையடுத்து, பணிநிரவல் ஊழியர்க ளின் நலச்சங்க தலைவர் குமரவேல் தலைமையிலான நிர்வாகிகள், பதி வாளர் கிருஷ்ணமோகனை சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பெற்றுக்  கொண்ட பதிவாளர், இது தொடர்பாக  அரசின் கவனத்திற்கு எடுத்து செல் லப்படும் என்று உறுதியளித்தார்.