tamilnadu

கடலூரில் நூதன முறையில் சாராயம் கடத்தல்

கடலூர், மே 6-கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் கடலூர் அமலாக்கப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில், மது கடத்தலை தடுக்கும் மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் அழகிரி மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற சரக்கு வாகனத்தை மறித்த போது அதன் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, அந்த வாகனத்தை சோதனையிட்ட போது ஆஸ்பெஸ்டாஸ் சீட்டினை வாகனத்திற்குள் பாரம் போல் ஏற்றிக்கொண்டு அந்த வண்டிக்குள் சிறிய அளவிலான பெட்டிகளில் 35 லிட்டர் கொள்ளவு கொண்ட 30 கேன்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சமாகும். வாகனத்தின் மதிப்பு ரூ. 5 லட்சமாகும். இதனையடுத்து, சாராயம் மற்றும் வாகனத்தை புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வரப்பட்ட நிலையில் எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்ற விபரம் தெரியவில்லை. எனவே, தப்பியோடிய ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;