tamilnadu

கடலூர் மாவட்டத்தில் 64 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: ஆட்சியர் தகவல்

கடலூர், ஜூன் 14- கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 520 பேர் வரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள திருப்பாதிரிபுலியூர் சரவணா நகர், கடலூர் முதுநுகர் கிஞ்சம் பேட்டை, சிங்காரத்தோப்பு ஆகிய பகுதி களில்  மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்  செல்வன் ஆய்வு செய்தார். அப்போது அவர்  கூறுகையில், கொரோனா தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கை கழுவும் பழ கத்தினை அதிகப்படுத்திக்கொள்ளுதல் ஆகி யவை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் 64 இடங்கள் கட்டுப்ப  டுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. பொது மக்கள் அனைவரும் சமூக பொறுப்பு ணர்வுடன் நடந்து கொள்ளவதோடு, மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளித்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து ஆய்வு செய்யப் பட்ட பகுதிகளில் கபசுர குடிநீர் மற்றும் அத னைத் தயாரிக்கும் பொடியை பொது மக்களுக்கு ஆட்சியர் வழங்கினார். ஆய்வின்போது கடலூர் கோட்டாட்சியர் ப.ஜெகதீஸ்வரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் எம்.கீதா, நகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

;