tamilnadu

img

திமுக அணிக்கு வாக்குகள் கோரி தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்

ஓசூர், ஏப்.1-ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தேர்தல் மற்றும் தொழிற்சங்களின் கடமைகள் குறித்து ஆலோசனைப் கூட்டம் நடைபெற்றது. எல்பிஎப் மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பீட்டர் தலைவர் சிறீதர், ஏஐடியுசி செயலாளர் மாதையன், மாநிலக் குழு உறுப்பினர் லகுமையா, எல்பிஎப் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், சுகுமார் ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ பிரகாஷ், வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன், அரசு போக்குவரத்துக் கழக தொமுச தலைவர் முரளி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர், ஓசூர் தொகுதி திமுக வேட் பாளர் சத்யா, சேதுமாதவனும் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கிருஷ்ணகிரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ஏ.செல்ல குமாருக்கு கை சின்னத்திலும், ஓசூர் தொகுதி திமுக வேட்பாளர் சத்யாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்குகள் கோரியும் பிரச்சாரம் மேற் கொள் வது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

;