tamilnadu

img

பாஜக கூட்டணி அரசு உள்ள பீகாரில் சிஏஏவு-க்கு எதிராக சட்டம் இயற்றும் போது தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரத் தயக்கம் ஏன்?

ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

குடவாசல், மார்ச் 2- குடியுரிமைத் திருத்தச் சட்டத்து க்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு  முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நிதியளிப்பு பேரவை, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடை பெற்றது. இதில் பங்கேற்று ஜி.ராம கிருஷ்ணன் பேசியது: குடியுரிமை திருத்தச் சட்ட மானது, சிறுபான்மை மக்களை மட்டும் பாதிக்கக் கூடியது அல்ல. ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பாதிக்கும். இந்திய அரசியல் சாச னம் இந்திய மக்களுக்கு குடியுரி மை வழங்கியுள்ளது. ஆனால், குடியுரிமை குறித்து தேவையற்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே, அனைத்து தரப்பு மக்களும்  பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தில்லி வன்முறைவெறியாட்டம் என்பது ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வன் முறையால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சிஏஏ-க்கு எதிராக முதன்  முதலாக கேரள அரசு தீர்மானம் நிறை வேற்றியது. ஆனால் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற தயாராக இல்லை. பாஜக ஆதரவுடன் ஆட்சி  நடைபெறும் பீகாரிலும் சிஏஏ-க்கு  எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதை அங்குள்ள பாஜகவும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, குடியுரிமை திருத்தச் சட்ட த்துக்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேரவைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பேரவையில் திருவாரூர் மாவட்டத்தில் நகர, ஒன்றியப் பகுதிகளில் பொது மக்களிடமிருந்தும், கட்சி ஆதர வாளர்களிடமிருந்தும் திரட்டிய கட்சி வளர்ச்சி நிதியானது, ஜி.ராம கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

;