tamilnadu

img

விடுமுறை முடிந்தவுடன் புத்தகம் வழங்க கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை, டிச.27-  அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜனவரி 2 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.  இருக்கிறது. இதில் கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல்,  ஆங்கில புத்தாண்டு ஆகிய 4 நாட்கள் தவிர பிற நாட்களில் தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். அரையாண்டு விடுமுறையை பயன் படுத்தி, மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை அனைத்து பள்ளிகளும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு முன்னரே சென்று வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளான 3 ஆம் தேதியன்று மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மூன்றாம்  பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட வேண்டும். விடுமுறையை பயன்படுத்தி பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தி, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் அரையாண்டு தேர்ச்சி விகிதங்களை அனைத்து பள்ளிகளும் 3 ஆம் தேதி மாலைக்குள் கல்வியியல் மேலாண்மை தகவல் மைய (இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;