எஸ்எப்ஐ வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 10- அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்களை கிடைக்கச் செய்த பிறகே தொலைக்காட்சி வழி வகுப்பினை துவங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செய லாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மாண வர்கள் கல்வி பயில்வதிலிருந்து விலகி யிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர் களை தொடர்ந்து கல்வி கற்கும் சூழ்நிலை களை ஏற்படுத்திட கல்வியாளர்கள், மாண வர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தர ப்பினர் ஆலோசனை வழங்கியுள்ள நிலை யில் வரும் 13 ஆம் தேதி முதல் தொலைக் காட்சி வழியில் பாடங்களை நடத்திட பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு சாத்தியமான வழியில் பாடங்களை நடத்திட தமிழக அரசு எடுத்துள்ள முயற்சி ஏற்புடையதாக இருப் பினும், வெறும் நான்கு நாட்கள் இடை வெளியில் அறிவிப்பது சாத்தியமானதாக இருக்காது. மேலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு பெரும்பா லான பள்ளிகளுக்கு வந்துள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங் களை கிடைக்கச்செய்வது கற்பதற்கான சூழலை மேலும் உறுதிப்படுத்த முடியும். எனவே தமிழக அரசு அனைத்து மாண வர்களுக்கும் பாடப்புத்தகங்களை வழங்கியபிறகு போதிய திட்டமிடலோடு தொலைக்காட்சி வழி வகுப்புகளை துவங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.