tamilnadu

img

ஒரே குடும்ப அட்டை திட்டம் மாநிலங்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி

தஞ்சாவூர், ஜூன் 29- ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை எனும் முறை மாநிலங்களின் அடை யாளத்தையும் உரிமையையும் அழிக் கும் முயற்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். தஞ்சாவூரில் செய்தியாளர்கள் அவர் கூறியதாவது: 8-ஆவது ஆண்டாக குறுவை சாகு படி இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் இரண்டு முறை கூடி தமிழ கத்திற்கு 40 டி.எம்.சி. , தண்ணீரை கொடுக்க வேண்டும் என கர்நாடகா விற்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நா டக அரசு தமிழகத்திற்கு தண்ணீர்  தரவில்லை. ஆணையம் சொல்லுவது டன் தனது பணி முடிந்து விட்டது எனச்  சென்று விடாமல் அந்த உத்தரவை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அடிக்கடி தில்லி  சென்று வருகின்றனர். ஆனால் காவிரி  விவகாரம் தொடர்பாக பேசுவதாக தெரியவில்லை. தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள மட்டுமே மோடியை சந்தித்து வருகிறார்கள்.

மொழித் திணிப்பு

ஒரே கல்விக் கொள்கை என்று  சொல்லி தமிழர் சங்க இலக்கியங் களை கற்றுக் கொள்ள வேண்டிய அவ சியம் இல்லை என கூறுகிறார்கள். கல்வி முறையை காவி மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 24 மணி நேரமும் மத்திய  அரசு, இந்தியை எந்த வழியில் திணிக்க லாம் என சிந்தித்து வருகிறது.  இந்தியாவில் மொழி பிரச்ச னையை தீர்க்க ஒரே வழி அரசியல் சட்டத்தை திருத்துவது தான். இந்திய அரசியல் சட்டத்தில் 8 பட்டியலில் உள்ள 20 மொழிகளையும் ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி, அலுவல், பயிற்று மொழியாக வும் தமிழ் இருக்க வேண்டும். மக்கள் விரும்பும் எந்த மொழியையும் படிக்க லாம். ஆனால் விருப்பத்திற்கு மாறாக  மொழித் திணிப்பு என்பது கூடாது. இது  மக்களின் விருப்பத்திற்கு விரோத மானது.  ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு  என்ற முறையை மத்திய அரசு கொண்டு  வர உள்ளது. அதன் மூலம் மாநிலங்க ளின் அடிப்படை அடையாளத்தையும், உரிமையையும் அழிக்க முயற்சி செய்கிறது. மாநிலங்கள் இல்லாத நிலையை உருவாக்கி பல மொழி, பல இனங்களை அழிப்பது தான் நோக்க மாக உள்ளது.  எனவே தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு அணியினர், கல்வி வரைவு கொள்கை, ஒரே நாடு ஒரே  ரேசன் கார்டு, ஒரே நாடு ஒரே தேர்தல்  திட்டங்களை எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

பெருந்திரள் பேரணி

தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்  களை போராட்டம் என்ற பெயரில்  தடுப்பதா என பலரும் கேள்வி எழுப்பி  வருகின்றனர். யாரும் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக இல்லை. சேது  சமுத்திர திட்டத்தை வரவேற்கிறோம். தமிழகத்தில் மூடி கிடக்கும் சிறு, குறு  தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து  தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இது போன்ற வளர்ச்சி  திட்டங்களை ஏற்கலாம்.  ஆனால் விவசாயத்திற்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரே? கார்பன், ஷேல் கேஸ், மீத்தேன் விளை நிலங்களில் எரிவாயு  குழாய் பதிப்பது, எட்டு வழிச்சாலை போன்றவை வளர்ச்சிக்கான திட்டங் களா? இதுபோன்ற திட்டங்களால் யாருக்கும் லாபம் இல்லை. இது மக்க ளுக்கான வளர்ச்சி திட்டங்கள் அல்ல.  கார்ப்பரேட்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களே.  தற்போது வளர்ச்சி திட்டங்களின் பெயரில் எதை வேண்டுமானா லும் செய்யலாம் என்பதை தான் ஏற்க முடியாது. இதை எல்லாம் தடுக்க கோரி வரும் ஜூலை 9 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை நோக்கி பெருந்திரள் பேரணி நடத்தப்  பட உள்ளது.

குடிசையில் வாழ்வது அழகைக் கெடுக்கிறதா?

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் குடியிருக்கும் ஏழைகளை அப்புறப்படுத்தி விட்டு, நகரத்தை அழகுபடுத்த முயற்சி நடக்கிறது. ஏழை மக்கள் குடிசையில் வாழ்வது நகரின் அழகை கெடுக்கிறதா? ஏழை களாக இருப்பது அவர்களின் தவறு  அல்ல, அரசின் தவறு. அவர்களுக்கு  மாடிவீடு கட்டிக் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லுகிறார்கள்? அவர்களுக்கு வசிப்பதற்கு மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும்.  இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.  மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.சி.பழனிவேலு, ஆர்.மனோ கரன், சின்னை. பாண்டியன், என்.வி. கண்ணன், பி.செந்தில்குமார், மாவட்  டக் குழு உறுப்பினர்கள் கே.அபிமன் னன், சரவணன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, நகரக் குழு உறுப்பினர் ஹெச்.அப்துல் நசீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.