சென்னை, மே 9- சென்னை மாநகரில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு மண்ட லமாக கோடம்பாக்கம் மாறியுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது மக்களை பயமுறுத்தி கொண்டும் வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட 15 மண்டல வாரியான விவரத்தை மாநக ராட்சி வெளியிட்டுள்ளது. கோடம்பாக்கம் 546 பேருடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. திரு.வி.க. நகர் 477 பேர், ராயபுரம் 490 பேர், தேனாம்பேட்டை 343 பேர் என சென்னை மாநகர் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.