நெல்லை கருத்தரங்கில் டி.கே. ரங்கராஜன் எம்.பி. பேச்சு
திருநெல்வேலி, செப். 18 - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி.நெல்லையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார். இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சார்பில் காஷ்மீர் குறித்தான கருத்தரங்கம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு பேராசிரியர் சேவியர் அமல்ராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர் கோமதிநாயகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:
இந்தியாவில் தற்போது நடக்கும் பாரதீய ஜனதா ஆட்சியால் மக்கள் பல்வேறு துன்பங்க ளுக்கு ஆளாகியுள்ளனர். பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறலாம். அதிகமாக பொய்களை கூறும் கட்சியாக பாஜக உள்ளது. தற்போது பாஜகவில் அதிகமாக பேசப்பட்டு வருபவர் அமித்ஷா. அவர் எது சொன்னாலும் அது பெரிய செய்தி யாக வெளிவருகிறது. காஷ்மீருக்கு வழங்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது காஷ்மீர் மக்களுக்கு மட்டும் அல்ல, இந்தியா வில் உள்ள அனைவருக்கும் ஆபத்தானது. ஏனென்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இந் திய மூவர்ண கொடியை விரும்புவதில்லை. தேசத்திற்கு ஒரே கொடியாக காவி கொடி யை மட்டுமே விரும்புகின்றனர்.
காஷ்மீரில் உள்ளவர்கள் கல்வி அறி விலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குபவர் கள். மிகவும் சுகாதாரமான பகுதியாகும். எனவே இதனை ஆர்எஸ்எஸ் மயமாக்கி விடவேண்டும் என விரும்புகின்றனர். இந்தியா - அமெரிக்கா உறவு வலுப்பெற்று இருக் கிறது எனவும் உலக அரசியலில் இந்தியா அங்கம் வகிக்கப்போகிறது எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ர மணியம் ஜெயசங்கர் கூறுகிறார். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லையே. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. கச்சா எண்ணை விலை அதிகரித்துள்ளது. பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி இளைய தலைமுறையினர் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் எங்கெல்லாம் சட்டங்கள் சரியாக செயல்பட வில்லையோ அங்கு நீதியை நிலைநாட்ட லாம். ஆகவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.