tamilnadu

img

ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்

அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை, நவ. 28- உள்ளாட்சித் தேர்தல் தொடர்  பாக  நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில், தேர்தலை 2 கட்டமாக நடத்த  அனைத்து அரசியல் கட்சித்தலை வர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடைபெற்று வரு கிறது. இதற்கான வாக்காளர் பட்டி யல் சரிபார்க்கப்பட்டு தேர்த லுக்கான ஏற்பாடுகளை மாநில  தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கியுள்ளது. டிசம்பர் கடைசி அல்லது ஜனவரியில் தேர்  தலை நடத்துவதற்கு ஆலோ சனை செய்து வருகிறது. பஞ்சாயத்து ராஜ் அமைப்பு களான ஊராட்சிகள், ஊராட்சி  ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு ஒரு கட்டமாக வும், பேரூராட்சி, நகராட்சி, மாநக ராட்சி ஆகியவற்றுக்கு 2ஆம்  கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட லாம் என தெரிகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகளுடன்  வியாழனன்று (நவ.28) கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலு வலகத்தில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமை தாங்கி னார். மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் சுப்பிரமணி, சென்னை மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் மற்றும் பேரூராட்சி, பஞ்சாயத்து இயக்கு னர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை துணைத்  தலைவர் பொள்ளாச்சி ஜெய ராமன், வழக்கறிஞர் பாபு முருக வேல், தி.மு.க. சார்பில் வக்கீல் கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாநிலக்குழு உறுப்பி னர் க.உதயகுமார், வட சென்னை மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன், இந்திய கம்யூ னிஸ்டு ஏழுமலை, காங்கிரஸ் சார்பில் ஆர்.தாமோதரன், வக்கீல் பிரிவு இணை தலைவர் எஸ்.கே.நவாஷ். பா.ஜ.க மாநகரச் செயலாளர் ஜெய்சங்கர், செய்தி தொடர்பாளர் குமரகுரு, வசந்தகுமார், தே.மு.தி.க. பார்த்தசாரதி, மோகன்ராஜ், உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சியினர் உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், இட  ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க வேண்டும்  என வலியுறுத்தினர்.

;