தமிழகத்தில் திங்களன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 பேரில் இருந்து 67 பேராக அதிகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 10 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோயாளி 51: ஆண் 25 வயது (கொரோனா பாதித்த நோயாளி 12-ன் குடும்ப உறுப்பினர்) மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி.
நோயாளிகள் 52 - 55 :அமெரிக்காவில் இருந்து திரும்பிய நோயாளி 42 உடன் தொடர்பில் இருந்த சென்னையைச் சேர்ந்த 4 நான்கு பேர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (52 வயது பெண்மணி, 76 வயது பெண்மணி, 15 வயது பெண், 20 வயது ஆண்)
நோயாளிகள் 56 - 65: (10 ஆண்கள்) அனைவருமே ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். அனைவரும் தில்லி சென்று வந்துள்ளனர். தாய்லாந்தைச் சேர்ந்த நோயாளிகள் 5 மற்றும் ஆறுடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
நோயாளி 66: பெண்மணி - 50 வயது. சென்னை பாரிமுனையைச் சேர்ந்தவர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோயாளி 67: ஆண் - 42 வயது. குளித்தலையைச் சேர்ந்தவர். தில்லிக்குச் சென்று வந்தவர். கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.