tamilnadu

img

உத்திரமேரூர் அருகே 18 ஆம் நூற்றாண்டு சதி கற்கள் கண்டுபிடிப்பு

உத்திரமேரூர்,ஜன.16- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர் வட்டம் சாலவாக்கம் கிரா மத்திலிருந்து திருமுக்கூடல் செல்லும் சாலையில் உள்ளது எடமிச்சி கிராமம். இக்கிராமத்தில் 18 ஆம் நூற்றாண்டை சார்ந்த  இரண்டு சதிகற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான சு. பாலாஜி தலைமையில் தமிழர் தொன்மம் குழு அமைப்பாளர் வெற்றித் தமிழன் ஆகியோர் இணைந்து எடமிச்சி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டபோது இவ்விரண்டு சதிகற்களை கண்ட றிந்தனர்.  

சதி கற்கள் என்பது தன் இனக் குழுவை காக்கவோ, நாட்டை காக்கவோ, அல்லது ஊரை காப்  பதற்காகவோ போரில் வீர மரண மடைந்த கணவரின் உடலோடு அவனது மனைவி தீ மூட்டி உயிரை மாய்க்க உடன்கட்டை ஏறும் நிகழ்விற்கு சதி  என்று பெயர். மரணத்தை தழுவிய கண வன் மனைவியின் நினைவை போற்றும் வகையில் அவர்களது உருவங்களை சிற்பமாக செதுக்கி  அவற்றை வணங்கி வழிபடுவர் இதற்கு சதிகற்கள் என்று பெயர். இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று  ஆய்வு மையத் தலை வர் சு.பாலாஜி கூறுகையில், “எட மிச்சி கிராமத்தில் கள ஆய்வு செய்த போது அவ்வூர் குளக்கரை யில் 2 சதிகற்களை கண்டறிந் தோம். அந்த குளத்தை தூர்வாரி கரையை சுத்தம் செய்தபோது இவைகள் கிடைத்துள்ளது” என்றார். இரண்டுசதிகற்களும் சிறிது  உடைந்த நிலையில் காணப்படு கிறது. 34 சென்டிமீட்டர் உயரமும் 47 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட ஒரு சதிக்கல்லில் எட்டு வரிகள் கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது.  1706 ஆம் ஆண்டு செந்தாமள் என்பவள்  கணவன் இறந்தவுடன் தீ மூட்டி உடன்கட்டை ஏறினாள் என்ற செய்தியை அறியமுடிகிறது என்றும் அவர் கூறினார். இந்த சதிக்கல்லில் உள்ள  கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு, சிற்ப அமைப்பு ஆகிய வற்றைக் கொண்டு இவைகள் பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை அறியலாம். கள ஆய்வில் உத்திரமேரூர் பகுதி களில் முதன்முதலாக கல்வெட்டு  உடன் கூடிய சதிக்கல் இங்கே  கண்டெடுத்தது  குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.  உடனடியாக தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி இவற்றை பாதுகாக்கப்பட வேண்  டும் என்பதே இப்பகுதி வரலாற்று  ஆர்வலர்களின் கருத்தாகும்.

;