கொரோனா தொற்றினால் தமிழகத்தில் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் இல்லை என்பதை வைத்து தற்போது தமிழகம் 3வது நிலையை எட்டி உள்ளது. மின்னல் வேகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவி வருகிறது. இந்த சவாலான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை பணியாளர்களுக்கு ஒருமாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.