காஞ்சிபுரம், மார்ச் 31- ஜவுளித்துறையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்காக ஒதுக் கப்பட்ட நிதிகளை, நெசவாளர்களின் துயரை தீர்க்கும் நிவாரண உதவிகளுக்கு வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு நெசவுத் தொழி லாளர் கைத்தறி சம்மேளன (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை யால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. காஞ்சிபுரம், திருக்க ழுக்குன்றத்தில் நெசவுத்தொழில் தற்போ தைய நிலையை விட இனி வரும் நாட்களில் மீள முடியாத பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளது. தற்போது, தனியார் கைத்தறி பட்டுச் சேலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்கெனவே உற்பத்தி செய்து வழங்கிய சேலைகளுக்கான பணம் வழங்க வில்லை. காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள அரசு பட்டு கூட்டுறவு சங்கங்களும் இதே நிலையில்தான் உள் ளன. இதனால், நெசவாளர்கள் தாங்கள் ஏற்கெனவே உற்பத்தி செய்து வழங்கிய பட்டுச் சேலைக்கான கூலியை பெறாமல் உள்ளனர்.
தற்போது, புதிதாக சேலை உற்பத்தி செய்வதற்கான தொழிலும் மேற்கொள்ள முடியாமல் நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆனால், நெசவா ளர்களுக்கென நிவாரண அறிவிப்புகள் அர சிடம் இல்லை. அரசுக்கும் நிதிச்சுமை ஏற்ப டும் என்ப தால், ஏற்கெனவே ஜவுளித் துறையில் மேம் பாட்டு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நெசவாளர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்குவதற்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், நெசவாளர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.