tamilnadu

img

பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு 

சென்னை,ஜன. 6- 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக  சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் திங்க ளன்று (ஜன.6) காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையை வாசிக்க தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின், “ஊழல் என்பதே நோக்கம்; பாஜக அரசின் பாதந் தாங்கு வதே பரம சுகம்’ என்று நடக்கும் அதி முக ஆட்சியில், இந்த ஆளுநர் உரையி னால் நாட்டில் எந்தவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. மதச் சார்பின்மைக்கு வேட்டு வைத்து, நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்க ளித்தது, அது நிறைவேறக் காரண மாகி; சிறுபான்மை இஸ்லாமி யர்க்கும், இந்துக்களான ஈழத் தமிழர்க ளுக்கும் துரோகம் இழைத்து; தவறு களுக்கெல்லாம் உச்ச கட்டத் தவறு இழைத்து விட்டது”  என்றதும் ஸ்டா லினை தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அவையிலிருந்து வெளியேறினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் இந்தி யன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

புறக்கணிப்பு ஏன்? 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்,”நாட்டின் மதச்சார்பின் மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய வகை யில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் இஸ்லாமியர்கள், சிறுபான்மை மக்கள்  இலங்கைத் தமிழர்கள் கடும் பாதிப்புக்  குள்ளாகினர். இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை நாங்கள் ஓய மாட்டோம்”என்றார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்த லில் தேர்தல் ஆணையமும் காவல் துறையும் அரசு நிர்வாகமும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக  பட்டவர்த்தன மாக செயல்பட்டிருக்கி றது என்றும் அவர் கூறினார். தேர்தல் ஆணையர் எடப்பாடியின்  பள்ளிக் கூடத்தில் பாடம் படித்தி ருப்பார் போல அதனால்தான் உள் ளாட்சி தேர்தல் நேர்மையாக நடந்தது என்று பதிலளித்துள்ளார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை. புதிய  வேலை வாய்ப்புகளும் கிடையாது. சட்டம் ஒழுங்கு சரியாக பாதுகாக்கப்  பட வில்லை. 90 லட்சம் இளைஞர்க ளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி யிருக்கிறது. விவசாயிகள், நெசவா ளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் என யாருக்குமே இந்த ஆட்சியில் நிம்மதியே கிடையாது என்றார்.

காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராம சாமி,”இந்திய நாடு ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டிலே யார் ஆட்சி செய்தாலும் ஜனநாயகத்தை தான் கடைப்பிடிக்க வேண்டும். மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக, என்ன  உணவு சாப்பிட வேண்டும் என்று  சொல்கிறது. இந்தியாவில் யார்  இருக்க வேண்டும் என்று சொல்கி றார்கள். இது போன்ற அராஜக ஆட்சியை தூக்கி எறியக் கூடிய விரை விலேயே முற்றுப்புள்ளி வைப்பதற்கு பொதுமக்கள் தயாராகி விட்டார்கள்” என்றார்.

டி.டி.வி தினகரன், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய  அரசிடம் ஆளும் அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்பதற்காகவும், மதச்சார்பற்ற நாட்டில் அனைவருக் கும் குடியுரிமை வழங்க வேண்டும்  என்று மற்ற எதிர்க்கட்சிகளோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழக மும் ஆளுநர் உரையை புறக்கணித்து  வெளிநடப்பு செய்தது”என்றார். தமீம் அன்சாரி, “தமிழகத்தில் இருக்கக் கூடிய பெரும்பாலான அரசி யல், மக்கள் இயக்கங் களும் சமூக  நீதி அமைப்புக ளும் வலியுறுத்தி யதன் அடிப்படையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  இந்திய தேசியக் கொடியை ஏந்தி  ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்திருக்கி றோம்” என்றார். ஜனநாயகம், அரசியல் சாசனம், சமூக நீதியை பாதுகாக்க   ஜனநாயக வடிவிலான இந்த போராட்டங்களுக்கு எதிர்வினையாக என் மீது நடவடிக்கை  எடுத்தால் இந்த நாட்டு நலனுக்காக அதை நான் ஏற்றுக் கொள்ள தயா ராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு,”தமிழக சட்டப் பேரவையிலும் அமைச்சரவை கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 7 பேர் விடு தலை குறித்த ஆளுநர் உரையில் இடம்  பெறாததும்,  இந்திய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறுவது பற்றியும்  குறிப்பிடப்பட்டது பெருத்த ஏமாற் றத்தை அளித்ததால் என்னுடைய எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக பதிவு செய்து வெளிநடப்பு செய்து ஆளுநர் உரையை புறக்கணித்தேன்”என்றார்.

 

;