சென்னை,ஜூலை 3- தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் ‘ஒரே நாடு, ஒரே ரேசன்’ திட்டம் குறித்து திமுக உறுப்பினர் எ.வ. வேலு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பேசுகையில்“ மாநிலத்திற்கு மாநிலம் உணவு பழக்க வழக்கங்கள் மாறுபடு கின்றன. பொது விநியோக திட்டத்தில் உணவு பொருட்கள் வழங்குவதிலும் வேறு பாடு உள்ளது” என்றார். தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டதால் நிதிச்சுமை அதிகமாகியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் புதிய நடைமுறையால் கூடுதல் நிதி சுமை ஒருபுறம் இருக்க, பொருட்களின் தேவையும் அதிகரிக்கும் என்பதால் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,“ ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு சுற்ற றிக்கை அனுப்பியுள்ளது. பரிசோதனை அடிப்படையில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் அறி முகம் செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள திட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மாநில அரசு முடிவு எடுக்கும் என்றார்.
பேரவையில் இன்று...
தமிழக சட்டப்பேரவையில் வியாழனன்று (ஜூலை 4) மின்சாரம், மதுவிலக்கு மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகின்றன.